Friday, July 15, 2011

இல்லத்தரசி



எண்ணற்ற எண்ண அலைகளில் மிதந்து கொண்டிருக்கும் மனமே...
சற்று நேரம் நான் நானாக இருக்க முயற்சித்து,
என் பேனாவால் என் உணர்ச்சிகளை வெளிக்காட்ட முற்பட்டுள்ளேன்.

மூன்றாண்டுகளுக்கு முன்பு வரை, மனதிற்குப் பிடித்ததை மட்டும் செய்தேன்...
இருபத்திமூன்றாண்டுகளான எனக்கு இன்றோ, என் இல்லத்தைப் பற்றிய நினைவுகள் மட்டும்...

கத்திரிக்காய் குழம்போடு என்ன செய்ய,
கைக்குழந்தையை எப்படி சமாளிக்க,
வேலைக்காரியை இன்னும் காணவில்லையே...
சலவைக்குக் கொடுத்த துணிகளை கொண்டு வர வேண்டுமே...
நானும் மாறிப் போனேன் சராசரி மனையாளாக.

தொலைக்காட்சியில் சிறந்த பெண் தொழிலதிபரைக் காணும்போது...
தொலைப்பேசியில் பழைய சிநேகிதி தன் புதிய பணியிடத்தை வர்ணிக்கும்போது...
வீட்டு அலமாரியை சுத்தப்படுத்தையில் சின்னதாய் சிரிக்கும்
கல்லூரிப் பரிசுக் கோப்பைகளைக் காணும்போது...

ஏங்கும் என் மனதை எவ்வாறு சமாதானப்படுத்த என நினைக்கையில்
என் குழந்தை அழும் சத்தம் கேட்டு அலறி அடித்து ஓடுகிறேன் ...

- வைஷ்ணவி பிரசாத்.

4 comments:

  1. Nice narration, poetic expression. keep blogging..Jai

    ReplyDelete
  2. Well said abt reality of Womens life...Keep rockngg........

    ReplyDelete
  3. madam this phase will last only for 7 or 8 years. you can plan other things for the next70 years after that

    ReplyDelete
  4. raji mam:u r rite in one way.. however, in a metro wher u hav little help from parents (esp mothers who take care of d kids), u need 2 be wid dem once dey r back from home.

    also, getting a job is a little tough..

    ReplyDelete