Thursday, November 22, 2012

துப்பாக்கி


ஒரு ராணுவ வீரனின் வாழ்வில் நடக்கும் ஏதேச்சையான நிகழ்வு, நாட்டின் தீவிரவாத பிரச்சனையை ஒழிக்கும் சந்தர்ப்பமாக அமையும்பொழுது, அவன் எடுக்கும் ஆயுதமே துப்பாக்கி. விஜய் மற்றும் முருகதாஸ் கூட்டணியில் அமைந்திருக்கும் படம் இருவரின் ரசிகர்களையும் திருப்திப்படுத்தி இருக்கிறது. ஹீரோ இன்ட்ரோ சாங், சண்டைக் காட்சிகள், நடனம், காமெடி ,ஹீரோயிசம் க்ளைமாக்ஸ் என பல விஜய் பட கிளிஷேக்கள் இருந்தாலும் தீவிரவாத ஸ்லீப்பர் செல்ஸ் என்னும் திரைத்தளம் மட்டும் முருகதாஸ் உடையது.Image courtesy : http://www.indiaeveryday.in/tamilnadu/gallery/t/6688/vijay-thuppaki-movie-posters/2.htm

பிடிப்பட்ட தீவிரவாதியின் சுண்டு விரலை வெட்டுவது, போலீஸ் அதிகாரியை தற்கொலைக்கு தூண்டுவது, தங்கையை தீவிரவாதியின் இடத்திற்கு அனுப்புவது, தன உயிரை பணயம் வைப்பது போன்ற இடங்களில் மனத்தைக் கவரும் மாவீரன் ஆகிறான் விஜய். நண்பன் சத்யனுடன் ரகசியம் பேசுகையில் காஜலின் அழைப்பு வந்ததும் உடனே ஓடும்போது காதல் மன்னன் ஆகிறான். சற்று பூசினது போல் தெரியும் கன்னங்கள், புதுப் பொலிவு (ஒகே ஒகே, காஜல் அகர்வால் பத்தியும் கொஞ்சம் சொல்லுறேன் ). அகன்ற விழிகள், அழகிய சிரிப்பு, ஆவின் பால் நிறம் ( ஹூம், டீ போடுற காப்பல திரை விமர்சனம் எழுத உக்காந்தா இப்புடித்தான் :), அருமையான உயரம், அளவான நடிப்பு என கவனம் ஈர்க்கிறார் காஜல் அகர்வால்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் பாடல்கள் தொய்வையே ஏற்படுத்துகின்றன. கதையோடு ஒட்டாத ஒரே மாதிரியான பார்ட்டி, டூயெட் பாடல்களுக்கு மத்தியில் கேர்ள் ப்ரேன்ட் மட்டும் கொஞ்சம் ரசிக்கும் தரம்.

தீவிரவாதியைக் காட்டும் போது வரும் " யாயீ " ஹிந்துஸ்தானி கசல் இசையை எப்பயா விடப்போரிங்க ? " எனக்கு கொஞ்சம் டமில் தெரியும் " டயலாக்கை வாஞ்சிநாதன் படத்தில் வரும் தினத்தந்தி படிக்கும் யூசுப்கானே சொல்லிட்டான்..

ஹீரோவை கோட்சூட் மூலம் சுலபமாக கண்டுபிடிக்கும் வில்லன், தங்கையை நாயின் உதவியோடு மீட்கும் ஹீரோ, ஒத்தைக்கு ஒத்தை வாடா என வில்லனை உசுப்பேத்தி தப்பிக்கும் ஹீரோ, இதெல்லாம் ஆடியன்சை அல்வா கொடுத்து அமுக்க பார்த்திருக்கும் அநியாயங்கள் !


இதுபோன்ற சில சொதல்பல்கள் இருந்தாலும் வலுவான வசனங்களுக்காகவும் ராணுவ வீரர்களின் வாழ்க்கையை விளக்கிய விதத்திர்க்காகவும், கண்டிப்பாக ஒரு முறை ரசிக்கலாம், இந்தக் குறி தவறாத துப்பாக்கியை !

5 comments:

 1. jhukku chokkad review dheerasyi :)
  dhannu
  Raamesh Keerthi N.J

  ReplyDelete
 2. Thanku raamesh ! Athengud aski post choudhi thumi comment keruvo, me mullo angun chokkad likkus ! Thanks ..

  ReplyDelete
  Replies
  1. sure ghon post kerus, e-mail subscription kerlariyo :)
   thuro posting FB groupum post keruvo...
   - Raamesh Keerthi N.J

   Delete