Tuesday, November 26, 2013

   எழுத்தின் விதை

                                                                   


எழுத்துக்கள் எண்ணங்களின் வெளிப்பாடு;
எதிரியை எதிர்க்க இயலாதபோது இதயத்திற்கு
இதம் தரும் ஆறுதல் தாலாட்டு.

எழுத்துக்கள் பகிர்தலுக்கான முயற்சி;
உணர்ச்சிகளை ஊரார்க்கு உணர்த்தப் பயன்படும்
ஓர் சிறந்த கருவி.

வட்டியும் முதலுமாக, மறக்க நினைத்து, வேடிக்கைப் பார்க்க 
எனக்கும் ஆசைதான்.
என்ன செய்வது ?
என்னை நீங்கள் படிக்க 
நான் ராஜூ முருகனாகவோ மாரி செல்வராஜாகவோ முத்துக்குமாராகவோ 
இருக்க வேண்டுமே...

என் வாழ்க்கை நாடகத்தின் கதாப்பாத்திரங்கள்
என் வார்த்தைகளின் விதைகளாகி, விருட்சமாக வளர்ந்து,
இன்று விழுதுகளாக என்னோடு பயணிக்கின்றனர்.

இறந்த காலத்தின் கால்தடங்களை மறைத்து,
எதிர் கால கனவை நோக்கி,
இன்றைய நாளை நகர்த்திச் செல்லும்
இன்னுமோர் சிட்டுக்குருவி இது.

                                                                 - வைஷ்ணவி பிரசாத் .
                                                                   










6 comments:

  1. Just one word. Beautiful. Thanks for the wonderful post. Will keep coming.

    ReplyDelete
  2. உமது எழுத்துக்களின் வெலிப்படையான வெலிப்பாடு அருமை !

    சிட்டுக்குருவியின் சிரகுகள் சிரகடித்துக்கொன்டெ இருக்கட்டும்.

    ReplyDelete
  3. 2nd and 3rd line was awesome mai.... right said one... not only enemies ... :) when we cant able to against our lovable one's too :).... keep posting

    ReplyDelete